உங்கள் ஈஸ்டர் முட்டைகளை வண்ணமயமாக்க சுவாரஸ்யமான வழியைத் தேடுகிறீர்களா? நீங்கள் சொந்தமாக உருவாக்கக்கூடிய நச்சு அல்லாத இயற்கை சாயங்களைப் பயன்படுத்துவது எப்படி?
தொடர்ந்து படியுங்கள்.
இயற்கையான சாயங்கள் குழந்தைகள் பயன்படுத்த பாதுகாப்பானவை. இயற்கை வண்ணங்களின் கலவையுடன் உங்கள் சொந்த ஓவியத்தை உருவாக்குவோமா?
இந்த இயற்கையான சாயங்களை பயன்படுத்தி உங்கள் துணிகளில் வண்ண வடிவங்களை உருவாக்க முடியும்.
தேவையான பொருட்கள்
இயற்கை சாயம் தயாரிக்க தேவையான பொருட்கள் (மஞ்சள், முட்டைக்கோஸ், பீட்ரூட், வெங்காயத் தோல்கள் )
வினிகர்
உப்பு
கிண்ணங்கள் / கண்ணாடி குடுவை
வெள்ளை முட்டைகள்
எண்ணெய் (முட்டைகளை பிரகாசிக்க)
இயற்கை சாயம் பயன்படுத்தி ஈஸ்டர் முட்டை தயாரித்தல்
1. இயற்கை சாயப் பொருட்களை தண்ணீரில் மூழ்க வைத்து கொதிக்க வைக்கவும். சாய கரைச்சலை 30 முதல் 60 நிமிடங்கள் வரை வெப்பத்தில் வைக்கவும்.
வண்ண வழிகாட்டி:
இளஞ்சிவப்பு / சிவப்பு- அரைத்த பீட்ரூட்டை 2 தேக்கரண்டி வினிகருடன் தண்ணீரில் வேகவைக்கவும்.
ஆரஞ்சு முதல் இருண்ட பழுப்பு– வெங்காய தோல்கள் 2 தேக்கரண்டி வினிகருடன் தண்ணீரில் வேகவைக்கவும்.
நீலம் – வெட்டப்பட்ட ஊதா முட்டைக்கோஸ் 2 தேக்கரண்டி வினிகருடன் தண்ணீரில் வேகவைக்கவும்.
மஞ்சள் – மஞ்சள் தூள் மற்றும் 2 தேக்கரண்டி உப்பு சேர்த்து தண்ணீரில் வேகவைக்கவும்.
முட்டையை நேரடியாக இந்த திரவத்தில் சேர்த்தும் செய்யலாம் அல்லது சாயத்தை உருவாக்கி முட்டைகளை அதில் போட்டும் சாயமிடலாம்.
குறிப்பு: முட்டையின் சாயம் உண்மையான சாய நிறத்தை விட மிகவும் இலகுவாக இருக்கும். எனவே முட்டை சரியான சாயலை அடையும் வரை காத்திருங்கள்.
2. வேகவைத்த திரவத்தில் நீங்கள் விரும்பிய வண்ணத்தை அடைந்தவுடன் – அடுப்பிலிருந்து சாயநீரை அகற்றி அறை வெப்பநிலையில் குளிர விடுங்கள்.
3. வேகவைத்த சாயத்தை வடிகட்டி கொள்ளுங்கள்.
4. இப்போது, ஒவ்வொரு கப் இயற்கை சாயத்திற்கும் பயன்படுத்தப்படும் சாயப் பொருளைப் பொறுத்து ஒரு தேக்கரண்டி வினிகர் அல்லது உப்பு சேர்க்கவும். வினிகர் / உப்பு சாயத்தின் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது .
5. இப்போது இயற்கை சாய திரவத்தில் வெள்ளை முட்டைகளை போடுங்கள். ஆழமான நிறம் பெற முட்டைகளை அகற்றி உலர வைத்து மீண்டும் மூழ்க வைக்கவும். நீங்கள் விரும்பிய வண்ணம் கிடைக்கும் வரை மீண்டும் இதை செய்யவும்.
6. முட்டைகள் முழுமையாக காய்ந்ததும் – ஈரமான துணியால் மெதுவாக துடைக்கவும். பளபளப்பான நிறத்தை பெற சாயம் போட்ட முட்டைகளை சிறிதளவு எண்ணெய் கொண்டு துடைக்கவும்
இதையும் செய்து பாருங்கள்.
இயற்கை சாயத்தில் மூழ்கவைக்கும் முன் ரப்பர் பாண்டுகளை உங்கள் முட்டைகளில் போட்டும் இந்த பரிசோதனையை செய்யலாம். ரப்பர் பாண்டுகள் உள்ள பகுதியில் கறை படியாது – இதன் விளைவாக அழகான வடிவமைப்புகளை பெற முடியும்.
இயற்கை சாயக் கரைசலில் முட்டைகளை ஒரு இரவு ஊற வைக்கவும்.
இந்த இயற்கை சாயமிட்ட முட்டைகள் உங்கள் ஈஸ்டர் முட்டை திட்டங்களுக்கு சிறந்தவையாக இருக்கும். இன்றே இதை முயற்சி செய்து பாருங்கள்.