பேக்கிங் சோடா மற்றும் வினிகரை கொண்டு இயங்கும் படகு

பேக்கிங் சோடா மற்றும் வினிகரை கொண்டு இயங்கும் படகு தயாரிக்க கற்றுக்கொள்ளுங்கள் - விமானங்கள் மற்றும் ஜெட் என்ஜின்களின் பின்னால் செயல்படும் கொள்கைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.

பேக்கிங் சோடா மற்றும் வினிகரை கொண்டு இயங்கும் படகு – அறிவியல் பரிசோதனை

இந்த அறிவியல் பரிசோதனையின் செயல்பாட்டில் உங்கள் சிறிய விஞ்ஞானிகளை மணிக்கணக்கில் ஈடுபட வைக்க முடியும், மேலும் ஜெட் என்ஜின்கள் மற்றும் விமானங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும் இது உதவுகிறது.

பேக்கிங் சோடா மற்றும் வினிகரை கொண்டு இயங்கும் படகு

பேக்கிங் சோடா மற்றும் வினிகரைப் பயன்படுத்தி வீட்டில் நீராவி மூலம் இயங்கும் படகு பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.

தேவையான பொருட்கள்

கீழே பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களை சேகரித்து, எந்த நேரத்திலும், எங்கும் செயல்பாட்டை மேற்கொள்ளுங்கள். உங்கள் வீடு, வகுப்பறை, அறிவியல் முகாம்கள், அறிவியல் கண்காட்சி நிகழ்வுகள்போன்ற இடங்களில் இந்த பரிசோதனையை முயற்சி செய்யலாம்.

1) பேக்கிங் சோடா

2) வினிகர்

3) ஒரு முனையில் வளைந்திருக்கும் ஸ்ட்ரா.

4) டிஷூ பேப்பர்

5) பிளாஸ்டிக் பாட்டில்

6) சாலிடரிங் இரும்பு / கூர்மையான பொருள்

தேவையான பொருட்கள்-பேக்கிங் சோடா மற்றும் வினிகரை கொண்டு இயங்கும் படகு

வழிமுறைகள்

பேக்கிங் சோடா மற்றும் வினிகருக்கு இடையில் நடக்கும் வேதியியல் எதிர்வினைகளால் ஏற்படும் நீராவி மூலம் இயங்கும் படகை உருவாக்கும் எளிதான அறிவியல் பரிசோதனையை காண்போம்.

இங்கே விருப்பத்திற்கு: கிடைமட்ட கோணத்தை கருத்தில் கொண்டு வெற்று பாட்டிலை அலங்கரிக்கவும், அது ஒரு படகு போல தோற்றமளிக்கும்.

1: முதலில், சாலிடரிங் இரும்பைப் பயன்படுத்தி பாட்டிலின் கீழ் பக்கத்தில் ஒரு சிறிய துளை போடவும்.

பாட்டிலின் கீழ் பக்கத்தில் ஒரு சிறிய துளை போடவும்.

2: முக்கால் பகுதிஸ்ட்ராவ்வை பாட்டிலினுல் சொருகவும். சூடான பசை பயன்படுத்தி இடைவெளிகளை மூடுங்கள். ஸ்ட்ராவ்வை சரியான கோணத்தில் வைக்கவேண்டும், இதனால் வினிகர் ஸ்ட்ராவ்வின் மூலம் வெளியேறுவதை தவிர்க்கலாம்.

ஸ்ட்ராவ்வை பாட்டில் உள்ளெ வைத்து-படகு செய்யவும்

3:பாட்டிலில் வினிகராய் நிரப்பி மூடவும். வினிகரின் அளவு நீங்கள் எடுக்கும் பாட்டிலின் அளவைப் பொறுத்தது. ஒரு கப் வினிகர் படகை இயக்க போதுமானது.

பாட்டிலில் வினிகரை நிரப்பி மூடவும்.

5: பேக்கிங் சோடாவை பாட்டிலுக்குள் வைக்க வேண்டிய நேரம் இது. டிஷ்யூ பேப்பரில் சிறிது அளவு பேக்கிங் சோடாவை பேக் செய்து, பாட்டிலுக்குள் போடும் அளவிற்கு அதை மடிக்கவும். பேக்கிங் சோடா பாக்கெட்டை பாட்டிலில் வைத்த பிறகு பாட்டிலின் மூடியை மூடவும்.

பாட்டிலில் வினிகர் - படகு

6: பாட்டிலை அசைத்து, வினிகரில் பேக்கிங் சோடா படுமாரு செய்யவும் ஒரு நீர் நிரப்பிய தொட்டியில் பாட்டிலை கிடைமட்ட நிலையில் வைக்கவும். ஸ்ட்ராவின் வெளிப்புறம் தண்ணீரில் மூழ்கியிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

காகிதத்தில் சிறிது பேக்கிங் சோடா வைக்கவும்

7: பேக்கிங் சோடா மற்றும் வினிகருக்கு இடையிலான வேதியியல் எதிர்வினைக்குப் பிறகு நீங்கள் பாட்டில் உள்ளே குமிழ்களைக் காண்பீர்கள். சித்ராவின் முனையிலிருந்து குமிழ்கள் வெளியே வந்து படகு தொட்டியில் நகறருவதை நீங்கள் காணலாம்.

பேக்கிங் சோடா பையை வினிகரில் வைக்கவும்
பேக்கிங் சோடா கொண்டு இயங்கும் படகு

பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கொண்டு இயங்கும் படகுக்கு பின்னால் உள்ள அறிவியல்

வினிகரில் பேக்கிங் சோடா சேரும் பொழுது ஒருவித வேதியியல் எதிர்வினையைத் தொடங்குகிறது. வினிகர் மற்றும் பேக்கிங் சோடா இடையேயான வேதியியல் எதிர்வினை காரணமாக – கார்பன் டை ஆக்சைடு பாட்டிலில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

கார்பன் டை ஆக்சைடு வாயு வேறு எங்கும் செல்ல முடியாததால், அதிகப்படியான வாயு ஸ்ட்ராவ் வழியாக வெளியிடப்படுகிறது.

பாட்டிலுடன் இணைக்கப்பட்ட ஸ்ட்ரா பாட்டிலில்லிருந்து வாயு வெளியேற உதவுகிறது. பாட்டிலில் இருந்து வெளி வரும் வாயு அதன் அசல் நிலையில் இருந்து நகர செய்கிறது.

பேக்கிங் சோடா மற்றும் வினிகர் இயங்கும் படகு பாட்டில் உள்ளே ரசாயன எதிர்வினை நிற்கும் வரை அதன் இயக்கத்தைக் காட்டுகிறது.

பின்தங்கிய திசையில் கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுவது உந்து சக்தியை உருவாக்குகிறது, இது படகு முன்னோக்கி செல்ல உதவுகிறது.

ஜெட் என்ஜின்கள் மற்றும் விமானங்களில் பயன்படுத்தப்படும் அதே கொள்கையே உயர் அழுத்தத்தில் சூடான காற்று வெளியிடப்படுகிறது, இது விமானங்களை முன்னோக்கி நகர்த்த வைக்கிறது.

பேக்கிங் சோடா மற்றும் வினிகரைப் பயன்படுத்தி தொடர்புடைய பரிசோதனைகள்:

DIY எரிமலை

வெப்பநிலையில் பேக்கிங் சோடாவின் தாக்கம்

தர்பூசணியில் பேக்கிங் சோடா மற்றும் வினிகர்

சோதனை பற்றி விவாதிக்க முக்கியமான கேள்விகள்

பரிசோதனையைப் பற்றிய கேள்விகள் மற்றும் பதில்களைப் பற்றி விவாதிப்பது குழந்தைகளுக்கு அதன் பின்னால் உள்ள அறிவியலை பகுப்பாய்வு செய்ய எப்போதும் உதவியாக இருக்கும்.

1) படகில் செயல்பட்டு அதன் இயக்கத்தை ஆதரிக்கும் சக்திகள் யாவை?

2) தண்ணீரில் படகு இயக்கத்திற்கு உதவக்கூடிய வேறு ஏதேனும் சக்திகள் உள்ளதா என்பதைக் கண்டறியவும்?

3) படகின் இயக்கத்தை காற்று எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி விவாதிக்கவும்.

4) பேக்கிங் சோடா மற்றும் வினிகருக்கு இடையில் நடக்கும் ரசாயன எதிர்வினைகள் குறித்து மாணவர்களிடம் சொல்லுங்கள்.

5) படகு வேகமாக அல்லது மெதுவாக நகர்த்துவது எது?

6) படகை இயக்க வேதியியல் எதிர்வினைகளை உருவாக்கும் மாற்று வழிகள் மற்றும் ரசாயன பொருட்களைக் கண்டறியவும்.

பேக்கிங் சோடா மற்றும் வினிகரை கொண்டு இயங்கும் படகு

இன்னும் சில யோசனைகள் .

  • வினிகரின் அளவை மாற்றவும் (குறைவான அல்லது அதிக அளவு) மற்றும் படகின் இயக்கத்தில் அதன் தாக்கத்தைக் கண்டறியவும்.
  • பேக்கிங் சோடா அளவுகளைப் பின்பற்றி படகின் வேகத்தை சரிபார்க்கவும்.
  • பேக்கிங் சோடா மற்றும் வினிகர் போன்று படகுகளை திறம்பட இயக்க உதவும் பிற இரசாயன பொருட்களை கொண்டு முயற்சிக்கவும்.
  • ஸ்ட்ராவின் திறப்பை மூடிவிட்டு படகை இயக்கவும். படகின் இயக்கம் ஏன் இல்லை என்று விவாதிக்கவும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன