வீட்டில் உப்பு கிரிஸ்டல்களை உருவாக்குவது எப்படி (உப்பு மற்றும் தண்ணீருடன்)

உப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி உங்கள் உப்பு கிரிஸ்டலை வீட்டிலே தயாரிக்க கற்றுக்கொள்ளுங்கள். காகிதங்கள் மற்றும் உணவுக்கு உபயோகிக்கும் வண்ணங்களைப் பயன்படுத்தி தனித்துவமான வடிவமைப்புகளையும் வண்ணமயமான கிரிஸ்டல்களையும் உருவாக்கலாம். சோடியம் குளோரைடில் இருந்து உருவாகும் சதுர வடிவ படிகங்களைக் கவுனியுங்கள்.

உப்பு (சோடியம் குளோரைடு) மற்றும் தண்ணீருடன் வீட்டிலையே உப்பு கிரிஸ்டலை வளர்ப்பது குழந்தைகளுக்கு ஒரு வேடிக்கையான செயலாகும்.

போராக்ஸைப் பயன்படுத்தி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான (ஹாட்ஸ், ஸ்னோஃப்ளேக்ஸ்,கேண்டி கேன்ஸ் மற்றும் ஸ்னோ மேன்)போன்ற சில கிரிஸ்டல் ஆபரணங்களை நாங்கள் முன்பு முயற்சித்தோம்.

போராக்ஸைப் போலன்றி, உப்பு கிரிஸ்டல் உருவாக சில நாட்கள் அல்லது ஒரு வாரம் வரை ஆகும். ஆனால் உப்பு கிரிஸ்டல்களை வளர்ப்பது உப்பு தயாரிப்பின் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை கற்பிக்க ஒரு சிறந்த வழியாகும்.

வீட்டில் உப்பு கிரிஸ்டல் வளர்க்கும் பரிசோதனை

வீட்டில் உப்பு கிரிஸ்டல் வளர்ப்பது எப்படி

தேவையான பொருட்கள்

உப்பு (சோடியம் குளோரைடு – NaCl)

வெதுவெதுப்பான தண்ணீர்

தட்டுகள்

வண்ண காகிதங்கள் வெவ்வேறு வடிவங்களில் வெட்டப்படுவதற்கு.

உணவுக்கு உபயோகிக்கும் நிறங்கள்.

உப்பு கிரிஸ்டல் செய்வதற்கு தேவையான பொருட்கள்

உப்பு கிரிஸ்டலை உருவாக்கும் செயல்முறை

ஜாடியில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்ளவும். கிரிஸ்டல்களால் ஆன கிறிஸ்துமஸ் ஆபரணங்களை நாம் உருவாக்க போகிறோம் – கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரம் மற்றும் ஸ்நொ மேன்.

வெதுவெதுப்பான நீரில் ஒரு கப் உப்பு சேர்த்து உப்பு முழுவதுமாக கரைக்கும் வரை தொடர்ந்து கிளறவும். உப்பய் முழுவதுமாக கறைந்துள்ளதா என்பதை செரிபார்த்து கொள்ளுங்கள். இறுதி உப்பு கரைசலில் உப்பு எஞ்சியிருக்கக்கூடாது. இது ஒரு சூப்பர்சச்சுரேட்டட் உப்பு கரைசல் என்று அழைக்கப்படுகிறது.

தண்ணீரில் உப்பு கலக்கவும்

இப்போது மெதுவாக வெவ்வேறு தட்டுகளில் உப்புநீரை ஊற்றவும். வண்ணமயமான உப்பு கிரிஸ்டல்களை உருவாக்க உப்பு தண்ணீரில் சிறிது உணவுக்கு உபயோகிக்கும் வண்ணங்களை சேர்க்கவும்.

உப்பு நீரில் போட காகிதங்களை உங்களுக்கு தேவையான வடிவங்களில் வெட்டுங்கள்.

வெட்டிய காகிதங்களை வரிசை படுத்துங்கள். Since we targeted to create crystals to make Christmas ornaments – we made a Christmas tree, star, and snowman. ஆனால் இது முற்றிலும் உங்கள் விருப்பத்திற்குரியது. காகிதங்கள் இல்லாமலும் தட்டிலேயே கிரிஸ்டல்களை உருவாக்கலாம்.

இப்போது நாம் சூரிய ஒளியில் தட்டுகளை வைக்க வேண்டும். உப்பு கிரிஸ்டல் உருவாக 3 முதல் 4 நாட்கள் ஆகும் இது சூரிய ஒளியின் வெப்ப நிலையை பொறுத்தது.

காகிதங்களை உப்பு நீரில் வைக்கவும்

அடுத்தடுத்த நாட்களில் ஏற்படும் மாற்றங்களை கவனியுங்கள்.

நாள் 1

காகிதம் இன்னும் ஈரமான நிலையிலே உப்பு கரைசலில் உள்ளது . கரைசலின் மேற்புறத்தில் ஒரு அடுக்கு உப்பு கிரிஸ்டல் உருவாகுவதை பார்க்க முடிகிறது .

உப்பு கிரிஸ்டல் பரிசோதனை முதல் நாள்

நாள் 2

உப்பு கிரிஸ்டலின் அடுக்கு தடிமனாக இருந்தது, மேலும் உப்பு கிரிஸ்டல்கல் காகிதத்தின் மேல் தெளிவாகக் காண முடிந்தது.

உப்பு கிரிஸ்டல் பரிசோதனை இரண்டாவது நாள்.

நாள் 3

உப்பு கரைசலில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து நீரும் ஆவியாகி.உப்பு கிரிஸ்டல்கள் காகிதத்தின் மேல் படித்திருந்தன. காகிதத்தின் மேல் கிரிஸ்டல்கல் நன்றாக படிந்திருந்தது.

காகித துண்டுகள் இன்னும் ஈரமாக இருந்தன. சூரிய ஒளியில் முழுமையாக உலர நாம் அவற்றை தட்டில் இருந்து வெளியே எடுக்க வேண்டிம் .

உப்பு கிரிஸ்டல் பரிசோதனை மூன்றாம் நாள்

நாள் 4

காகிதம் முழுவதும் உப்பு கிரிஸ்டல்கள் உருவாகியிருப்பதை நீங்கள் காணலாம். கிறிஸ்துமஸ் மரத்தின் வடிவம் கொண்ட காகிதம் முழுவதும் உப்பு கிரிஸ்டல்கள் பனித்துளி போல் படிந்துள்ளது.

உப்பு கிரிஸ்டல் பரிசோதனை நான்காம் நாள்

உப்பு கிரிஸ்டல் வளர்ப்பதற்குப் பின்னால் உள்ள அறிவியல்

உப்பு கிரிஸ்டலுக்கு பின்னால் உள்ள அறிவியலைப் புரிந்துகொள்வதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான குறிப்புக்கள்.

கரைசல் :இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை ஒன்றோடு ஒன்று கலந்து உருவாக்கப்படுவதே கரைசல் ஆகும்.

கரைப்பான்:மற்றொன்றைக் கரைக்கும் பொருள் (எங்கள் பரிசோதனையில் – நீர் ஒரு கரைப்பான்).

கரைபொருள் : குறிப்பிட்ட கரைசலில் கரைந்து போகும் பொருள் (எங்கள் பரிசோதனையில் – உப்பு)

கரைசலை உருவாக்க கரை பொருளை கரைப்பானில் கலக்க வேண்டும். நீங்கள் இவ்வாறு கரைசலை உருவாக்கும் பொழுது,அப்பொருட்களின் மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று மோதி கரைந்து போகின்றன. இந்த மூலக்கூறுகள் நிலையான இயக்கத்தில் இருப்பதால் – கரைப்பான் மூலக்கூறுகள் கரைபொருளின் மூலக்கூறுகளுடன் மோதிக்கொள்கின்றன.

கரைக்கும் செயல்முறை பொதுவாக அதிக நேரம் எடுக்கும். கரைசலை உருவாக்க எடுக்கப்பட்ட நேரத்தை குறைக்க – உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன:

தட்டுகளை சூரிய ஒளியில் வைக்கவும் - உப்பு கிரிஸ்டல் உருவாக்கம்

கரைசலின் வெப்பநிலையை அதிகரிக்கவும்.

கரைப்பான் மற்றும் கரைபொருளை நன்றாகக் கிளறி மூலக்கூறுகளுக்கு இடையில் இயக்கத்தை அதிகரிக்க முயற்சிக்கவும்.

கரைபொருள் கரைப்பானில் கரைந்தவுடன் – அது மூன்று வகையான கரைசலை உருவாக்குகிறது:

தெவிட்டாத கரைசல்: எந்த கரைசலில் மேலும் கரைபொருளை கரைக்க முடியுமோ அது தெவிட்டாத கரைசல் எனப்படும்.

தெவிட்டிய கரைசல்: எந்த கரைசலில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாதோ அது தெவிட்டிய கரைசல் எனப்படும்.

அதி தெவிட்டிய கரைசல்: எந்த கரைசலில் கரைபொருளின் அளவு தெவிட்டிய கரைசலை விட அதிகமாக உள்ளதோ அக்கரைசல் அதி தெவிட்டிய கரைசல் எனப்படும். உதாரணமாக – அறை வெப்பநிலையில் உள்ள நீரை விட கொதிக்க வைத்த நீரில் அதிக உப்பை கரைக்க முடியும்.

இப்பொழுது படிகமயமாக்கல் செயல்முறை எவ்வாறு நிகழ்ந்தது என்பதைப் புரிந்துகொள்வோம்:

கரைபொருள் (உப்பு) கரைப்பானனில் (நீர்) கரைந்தவுடன் – அயனி பிணைப்புகள் விடுபட்டு அயனிகளை விடுவிக்கின்றன, ஏனெனில் இந்த அயனிகள் கரைப்பான் (நீர்) மூலக்கூறுகளால் ஈர்க்கப்படுகின்றன.

கரைசலை குளிர்விக்கும்போது, கரைப்பான் (நீர்) மூலக்கூறுகள் ஒன்றாக பிணைக்கத் தொடங்குகின்றன, இந்த மாற்றம் கரைசலில் இருந்து உப்பின் அயனிகளை வெளியேற்றுகின்றன. இந்த வெளியேற்றப் பட்ட உப்பின் -அயனிகள் காகிதத்திலும், தட்டிலும் படிகின்றன. நீர் ஆவியாகும்போது, நியாசின் மற்றும் குளோரின் அணுக்கள் ஒன்றிணைகின்றன, ஏனெனில் அவற்றைப் பிரிக்க நீர் இல்லை. நேரம் செல்ல செல்ல, உப்பு பிணைப்பின் இந்த விழுந்த மூலக்கூறுகள் ஒன்றாக சேர்ந்து உப்பு படிகங்களை உருவாக்குகின்றன (கன வடிவங்களில்).

கிறிஸ்துமஸ் கிரிஸ்டல் நட்சத்திரத்தை உருவாக்குதல்

இன்னும் சில யோசனைகள் .

இதை கிறிஸ்துமஸ் அறிவியல் திட்டமாக செய்துள்ளோம். உங்களுக்கு பிடித்த பொருளில் செய்து பார்க்கலாம். எ.கா., ஈஸ்டருக்கு முட்டை வடிவ கிரிஸ்டல்கள் உருவாக்க முயற்சிக்கவும்.

வெவ்வேறு உப்புகளைப் பயன்படுத்தி முயற்சிக்கவும் – கடல் உப்பு, அன்-அயோடைஸ் உப்பு, எப்சம் உப்பு, போராக்ஸ் உப்பு மற்றும் அயோடைஸ் உப்பு ஆகியவற்றைக் கொண்டு மீண்டும் செய்யவும். உருவான கிரிஸ்டல்களின் வெவ்வேறு வடிவங்களை சரிபார்க்கவும்.

குழாய் நீருக்கு பதிலாக, காய்ச்சி வடிகட்டிய தண்ணீரில் முயற்சி செய்து கிரிஸ்டல் வடிவங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்கவும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன