பாட்டிலில் முட்டையை நுழைப்பது எப்படி- காற்றழுத்தப் பரிசோதனை

பாட்டிலில் முட்டையை நுழைப்பது எப்படி அறிவியல் பரிசோதனை - வளிமண்டல அழுத்தம் மற்றும் வெப்பநிலை, காற்றின் அடர்த்தி போன்றவற்றுக்கு இடையிலான உறவைப் பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்கும் அற்புதமான காற்று அழுத்த பரிசோதனை.

நமது நிஜ வாழ்க்கையில் உள்ள அதிசயங்களைப் போலவே அறிவியலிலும் ஆச்சரியங்கள் உள்ளன.

இன்று, “முட்டையை ஒரு பாட்டிலினுள் நுழைப்பது எப்படி” என்பதைப் பற்றி ஆராய்வோம், இது எளிய கருத்துகளைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது , எவரும் முட்டையைத் தொடாமல் ஒரு பாட்டிலினுல் நுழைக்க முடியும்.

ஆம், முட்டை எந்த வெளி உதவியும் இல்லாமல் அறிவியல் கோட்பாடுகளின் உதவியுடன் ஒரு பாட்டிலுக்குள் அனுப்ப முடியும்.

இந்த அறிவியல் செயல்பாட்டின் குறிக்கோள்கள்

இந்த பரிசோதனையைப் பயன்படுத்தி, குழந்தைகள் பின்வருபவற்றை கற்றுக்கொள்ளலாம்,

1)வெப்பநிலைக்கும் அழுத்தத்திற்கும் இடையிலான தொடர்பு

2) பொருள்கள் மீது காற்று அழுத்தத்தின் தாக்கம்

3) நமது அன்றாட நடவடிக்கைகளில் காற்று அழுத்தத்தின் தாக்கம்

4) காற்றின் பண்புகள்

5) அடர்த்தி

இந்த சோதனை எளிமையாக இருந்தாலும், இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிப்பதற்கான நிறைய அறிவியல் தகவல்களைக் கொண்டுள்ளது.

பாட்டிலில் முட்டையை நுழைப்பது எப்படி – அறிவியல் பரிசோதனை

பாட்டிலில் முட்டையை நுழைப்பது எப்படி அறிவியல் பரிசோதனை

தேவையான பொருட்கள்

1) ஒரு கண்ணாடி ஜாடி. கண்ணாடி குடுவையின் கழுத்துப் பகுதி வேகவைத்த முட்டையின் அளவை விட சிறியதாக இருக்க வேண்டும், ஏனெனில் முட்டையை எளிதில் ஜாடிக்குள் நழுவ விடாமல் தடுக்கும். பால் மற்றும் ஜூஸ் பாட்டில்கள் இதற்கு பொருத்தமானவை.

2) ஒரு சிறிய துண்டு காகிதம்

3) ஒரு மெழுகுவர்த்தி அல்லது தீப்பெட்டி

4) ஒன்று அல்லது இரண்டு வேகவைத்த முட்டைகள்

பாட்டிலில் முட்டையை நுழைப்பது எப்படி தேவையான பொருட்கள்

ஏற்பாடுகள்

சோதனைக்கு செல்லும் முன்,முட்டைகளை வேகவைக்கவும். முட்டைகளை வேக 7-10 நிமிடங்கள் ஆகும்.

வேகவைத்த முட்டையின் வெளிப்புற ஓட்டை உரித்துக்கொள்ளவும். பரிசோதனைக்கான முட்டை தயார்.

எளிதான செய்முறையை தொடங்குவோமா!

1.சுத்தமான கண்ணாடி குடுவையை எடுத்து கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து தீமூட்டவும். காகிதத்தை சின்ன துண்டாக மடித்து வைத்து கொள்ளுங்கள், அதை நீங்கள் பாட்டிலில் போடுவது எளிதாக இருக்கும்.

ஒரு காகிதத்தை எரிக்கவும் - குழந்தைகளுக்கான பாட்டிலில் முட்டையை நுழைப்பது எப்படி பரிசோதனை

2.காகிதம் நன்றாக எரியும் வரை காத்திருங்கள். காகிதம் நன்றாக எரிய தொடங்கியதும் அதனை கண்ணாடி பாட்டிலில் போட்டு விடுங்கள்.

வேகவைத்த முட்டையை பாட்டிலின் மீது வைக்கவும் - காற்று அழுத்தம் பரிசோதனை

3. வேகவைத்த முட்டையை பாட்டிலின் மீது வைக்கவும்.

முடிவுகள்: இப்பொழுது முட்டை மெதுவாக உள்ளெ இறங்குவதை பார்க்கமுடியும். சில நேரங்களில், முட்டை எந்த உடைப்பும் இல்லாமல் கண்ணாடி பாட்டிலுக்குள் செல்லும், ஆனால் சில நேரங்களில் அது பாட்டிலினுல் செல்லும்போது உடைந்தும் போகலாம்.அது முட்டையின் அளவை பொறுத்தது.

பாட்டிலில் முட்டையை நுழைப்பது எப்படி பரிசோதனை-முடிவுகள்

குறிப்பு: உங்கள் முட்டை பாட்டிலுக்குள் செல்வது கடினமானால்,சிரிது எண்ணெயை பாட்டிலின் கழுத்தில் தடவலாம். எண்ணெய் தடவுவதால் முட்டை எளிதில் பாட்டிலுக்குள் செல்ல உதவுகிறது.

வெளிப்புற சக்திகளின் எந்த உதவியும் இல்லாமல் ஒரு முட்டை பாட்டிலுக்குள் செல்வதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறீர்களா? அந்த மந்திர அறிவியல் தந்திரத்தை நீங்கள் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? இந்த எளிய அறிவியல் செயல்பாடு எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறது என்பதைப் பற்றி விவாதிப்போம்.

பாட்டிலில் முட்டையை நுழைப்பது எப்படி பரிசோதனையின் பின்னால் உள்ள அறிவியல் கருத்துக்கள்.

இடத்திற்கேற்ப காற்றின் எடை அடர்த்தி மற்றும் அழுத்தம் போன்றவை மாறுபடும்.

பொதுவாக, நம்மைச் சுற்றியுள்ள காற்று அல்லது பொருள்கள் எந்த அழுத்தத்தையும் காட்டாது, ஏனெனில் அது சம அழுத்தத்துடன் சூழப்பட்டுள்ளது.

காற்றின் அழுத்தம் வேறுபடும் பொழுது சுற்றியுள்ள பொருட்களையும் பாதிக்கிறது.

இந்த அறிவியல் செயல்பாட்டில், காற்றில் அழுத்தம் ஏற்படுவதை நம்மால் காணமுடிகிறது.

எந்த வெளிப்புற உதவிகளும் இல்லாமல் முட்டை பாட்டிலுக்குள் நகர்வது,காற்று அழுத்ததினால் நிகழ்கிறது. அதைப் பற்றி விரிவாக பார்ப்போமா.

சோதனை தொடங்குவதற்கு முன், ஜாடியைச் சுற்றியுள்ள மற்றும் உள்ளே இருக்கும் காற்றின் அழுத்தம் சமமாக இருக்கும்.

அதாவது, கண்ணாடி பாட்டில் உள்ளேயும் வெளியேயும் உள்ள அழுத்தம் பரிசோதனையின் ஆரம்பத்தில் ஒன்றுதான்.

ஆனால் எரியும் காகிதத்தை கண்ணாடி பாட்டிலில் வைக்கும்போது, பாட்டிலில் காற்று விரிவடையத் தொடங்குகிறது. ஏனெனில் காற்று வெப்பமடையும் பொழுது விரிவடையும், இது காற்றின் குறிப்பிட்ட பண்பு.

கண்ணாடி பாட்டிலில் முட்டையை வைத்தவுடன், தீ அணைக்கப்பட்டு, காற்று குளிர்விக்கத் தொடங்குகிறது.

காற்று குளிர்ச்சியடையும் பொழுது, கண்ணாடி பாட்டிலுக்குள் இருக்கும் காற்றழுத்தத்தை குறைப்பதன் மூலம் அவை சுருங்கத் தொடங்குகின்றன.

அதாவது கண்ணாடி பாட்டில் உள்ளேயும் வெளியேயும் இருக்கும் காற்று அழுத்தத்தில் வேறுபாடு ஏற்படுகிறது.

பாட்டில் உள்ளே குறைந்த காற்று அழுத்தம் உள்ளது. வெளிப்புற அழுத்தம் அதை வெளியில் இருந்து தள்ளுவதால் முட்டை மெதுவாக பாட்டிலினுள் செல்கிறது.

பாட்டிலினுல் உள்ள காற்று குளிர்ச்சியடையும் பொழுது, கூடுதல் காற்று வெளியில் இருந்து இழுக்கப்படுகிறது.

இந்த செயல்பாட்டில், வெளிப்புற காற்று உள்ளே உள்ள இடைவெளிகளை நிரப்ப பாட்டிலினுள் செல்கின்றன. எனவே, இது முட்டையின் மீது அழுத்தத்தை கொடுத்து முட்டை பாட்டிலினுள் செல்ல உதவுகிறது.

பாட்டிலில் முட்டையை நுழைப்பது எப்படி பரிசோதனை

இன்னும் சில யோசனைகள் .

கொதிக்கும் நீர் மற்றும் பலூன் போன்ற பிற பொருட்களைப் பயன்படுத்தி நீங்கள் இந்த பரிசோதனையை முயற்சி செய்யலாம்.

1) பாட்டில் உள்ளே காகிதத்திற்கு பதிலாக சுடுத்தண்ணீரைப் பயன்படுத்தி இந்த பரிசோதனையை செய்யலாம்.

2) வேகவைத்த முட்டையின் இடத்தில் தண்ணீர் நிரப்பப்பட்ட பலூனைப் பயன்படுத்தி முயற்சிக்கவும்.

குழந்தைகளுக்கான சுவாரஸ்யமான காற்று அழுத்த செயல்பாடுகள்.

பாட்டிலலினுள் பலூனை நுழைப்பது எப்படி.

தொடாமல் கேனை நசுக்குவது எப்படி அறிவியல் பரிசோதனை.

சொட்டு நீர் பாட்டில் – நீர் விநியோகிப்பான் பின்னால் உள்ள அறிவியல்.

சூடான மற்றும் குளிர்ந்த நீரில் பலூன் பரிசோதனை.

ஆசிரியர்களுக்கான உதவிக்குறிப்புகள்

பரிசோதனையின் போது மாணவர்களை முழுமையாக ஈடுபடுத்த ஆசிரியர் கேட்கக்கூடிய முக்கியமான கேள்விகள் இங்கே. மேலும் பரிசோதனையின் பின்னணியில் உள்ள அறிவியலை வெளிப்படுத்துவதிலும் புரிந்து கொள்வதிலும் பங்கேற்க அவர்களை ஊக்குவித்தல் அவசியம்.

1) முட்டையைத் தொடாமல் பாட்டிலுக்குள் நகர்த்தியது எது?

2) இந்த அறிவியல் செயல்பாட்டில் ஏன் முட்டைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்?

3) பாட்டிலுக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றின் அழுத்தத்தை மாற்ற வேறு ஏதேனும் சாத்தியங்கள் உள்ளதா?

4) மீண்டும் பாட்டிலில் இருந்து முட்டை வெளியே வருமா? ஆம் என்றால், எப்படி?

5) முட்டையை பாட்டிலுக்குள் நகர்த்திய காற்றின் பண்புகள் யாவை?

பாதுகாப்பு நடவடிக்கைகள்

நாங்கள் நெருப்பைக் கையாள்வதால், இந்தச் செயலைச் செய்யும்போது குழந்தைகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பரிசோதனையை செய்யும்பொழுது பாதுகாப்பு கவசங்கள் அணிவது அவசியம். குழந்தைகள் இந்த பரிசோதனையை செய்யும் பொழுது பெரியவர்கள் /ஆசிரியர்கள் மேற்பார்வை அவசியம்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன