பலூன் ஹோவர் கிராஃப்ட் செய்வது எப்படி

எளிதான அறிவியல் திட்டத்தைப் இங்கு காணலாம் - பலூன் ஹோவர் கிராஃப்ட் செய்வதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் . காற்று மற்றும் உராய்வு ஹோவர் கிராஃப்டை எப்படி நகரச் செய்கிறது என்பதை பற்றி காண்போம்.

ஹோவர் கிராஃப்ட்ஸ் பழங்கால போக்குவரத்து வழிமுறையாக இருக்கலாம், ஆனால் அவை ஒரு அறிவியல் கண்காட்சி திட்டமாகவும் குழந்தைகளுக்கு ஒரு வேடிக்கை மற்றும் கல்வியை கற்றுத்தரக்கூடிய திட்டமாகவும் உள்ளது .

ஒரு பழைய சிடி மற்றும் பலூனைப் பயன்படுத்தி ‘ வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹோவர் கிராஃப்ட் ’ உருவாக்குவது பற்றி அறிந்து கொள்வோம்.

பலூன் ஹோவர் கிராஃப்ட்

வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹோவர் கிராஃப்ட்டை கொண்டு உராய்வு மற்றும் நியூட்டனின் மூன்றாவது இயக்க விதி பற்றி குழந்தைகளுக்கு கற்று தர முடியும்.

It can slide along your work table, offering a good demonstration for children to learn about friction and Newton’s Third Law of Motion.

இந்த வேடிக்கையான மற்றும் எளிதான அறிவியல் கண்காட்சி திட்டத்தை பற்றி ஆராய்வோமா!

பலூன் ஹோவர் கிராஃப்ட் அறிவியல் திட்டம்

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு பலூன் ஹோவர் கிராஃப்ட் தயாரிப்போமா!

ஹோவர் கிராஃப்ட்ஸ் செய்யத் தொடங்குவதற்கு முன் சேகரிக்க வேண்டிய பொருட்கள் :

1) பலூன்

2) ஒரு பிளாஸ்டிக் பாட்டில்

3) பசை

4) டக்ட் டேப்

5) பழைய மற்றும் சிறிய சிடி

தேவையான பொருட்கள்

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இந்த மினியேச்சர் ஹோவர் கிராஃப்ட்டை செய்ய முடியும்.

எளிதான வழி முறைகள்

பலூன் ஹோவர் கிராஃப்ட் செய்யும் பொழுது குழப்பத்தைத் தவிர்க்க இங்கு இணைக்கப்பட்டுள்ள படங்களையும் வழிமுறைகளையும் பின்பற்றவும் .

பாட்டிலை வெட்டவும்.

1: பாட்டிலின் கழுத்து பகுதியை வெட்டி அதை பிரிக்கவும்.

பாட்டில் ஒட்டுவதற்கு பசை தடவவும்

2: இப்போது, சிடி யின் மைய பகுதியில் வெட்டிய தண்ணீர் பாட்டிலை சூடான பசை பயன்படுத்தி ஓட்டுங்கள். பசை நன்கு காயும் வரை காத்திருங்கள், இதனால் பாட்டிலில் சிடி சரியாக இணைக்கப்படும்.

பாட்டிலின் மூடியை சிடி யுடன் இணையுங்கள்.

3: துளை போட்ட மூடியையும் நீங்கள் இங்கு பயன் படுத்தலாம். நீங்கள் அவ்வாறு செய்தால், பாட்டில் மூடியில் மூன்று முதல் நான்கு துளைகளை உருவாக்குங்கள், அதாவது காற்று மூடியில் இருந்து மெதுவாக வெளியேற வேண்டும்.

இப்பொழுது பலூனை ஊத தொடங்குகள்

4:

  • 4: பலூனை ஊதி, அதன் தொடக்கத்தில் ஒரு சிறிய திருப்பத்தை கொடுங்கள்.இதனால் காற்று உடனடியாக வெளியேறுவதை தவிர்க்கலாம்.
  • பலூனின் நிலையை சரிசெய்து, அது நேராகவும் சிடி யின் மைய பகுதியில் பொருந்தியிருப்பதையும் சரி பார்க்கவும்.
  • உயர்த்தப்பட்ட பலூனை இப்பொழுது காற்று வெளியில் செல்லுமாறு திருப்பத்தை சரிசெய்யுங்கள்.
Place the inflated balloon over the Bottle cap on the CD

That’s it! உங்கள் மினியேச்சர் ஹோவர் கிராஃப்ட் சறுக்குவதற்கு தயாராக உள்ளது.

5: நீங்கள் தயாரித்த உங்கள் ஹோவர் கிராஃப்டைக் பரிசோதனை செய்துப் பார்க்கக்கூடிய இடம் மென்மையான மற்றும் தட்டையான இடையூறுகள் இல்லாத இடமாக இருத்தல் வேண்டும். உங்கள் ஹோவர் கிராஃப்ட் தட்டையான மேற்பரப்பில் எவ்வளவு அற்புதமாக சறுக்குகிறது என்பதைப் பாருங்கள்.

DIY பலூன் ஹோவர் கிராஃப்ட்

உதவிக்குறிப்பு: ஹோவர் கிராஃப்ட்ஸ் அதன் பளபளப்பான பக்கம் மேல்நோக்கி எதிர்கொள்ளும் போது திறம்பட செயல்படும்.

ஹோவர் கிராஃப்ட் எவ்வாறு செயல்படுகிறது?

ஹோவர்கிராஃப்ட்ஸ் நியூட்டனின் மூன்றாவது இயக்கம் மற்றும் உராய்வு கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது.

உயர்த்தப்பட்ட பலூன் அழுத்தப்பட்ட வாயுவைக் கொண்டுள்ளது மற்றும் காற்றை வெளியேற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, காற்று பலூனின் வாய் பகுதியில் இருந்து வெளியே வர தொடங்கும்.அது சிடி யின் அடியில் காற்றின் அழுத்தத்தை உருவாக்குகிறது.

சிடி யின் மைய துளை மற்றும் பாட்டில் மூடியில் உள்ள துளைகள் வழியாக காற்று மெதுவாக வெளியே வர தொடங்கியது.

சிடி அடியில் உருவாக்கப்பட்ட காற்றின் மெல்லிய அடுக்கு தரையுக்கும் ஹோவர் கிராஃப்டுக்கும் இடையிலான உராய்வைக் குறைப்பதன் மூலம் அதை மேலும் நகர்த்தி செல்கிறது .

இது நியூட்டனின் மூன்றாவது இயக்க விதிகளை விளக்குகிறது,அதாவது பலூனில் இருந்து காற்று வெளியேறுவதால் அதற்கு எதிர்வினையாக சிடி முன்னோக்கி செல்கிறது.

கலந்துரையாடல் கேள்விகள்

செயல்பாட்டைச் செய்யும்போது உங்கள் குழந்தைகள் அல்லது மாணவர்களுடன் விவாதிக்க வேண்டிய முக்கியமான கேள்விகள்.

1) வெளியிடப்பட்ட காற்று எந்த வழியில் செல்கிறது-சமமாக அல்லது பக்கவாட்டாக அல்லது மேல்நோக்கி?

2) காற்று நிரப்பப்பட்ட பலூன் எப்படி ஹோவர் கிராஃப்ட் இயக்கத்தை எளிதாக்குகிறது?

3) ஹோவர் கிராஃப்ட் முன்னோக்கி நகர்வதற்காண காரணம் என்ன, ஏன் பின்நோக்கிச் செல்லவில்லை ?

4) வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹோவர் கிராஃப்ட்டின் சமமான எதிர்வினைகள் மற்றும் எதிர் எதிர்வினைகள் யாவை?

5) பலூன் காற்றை வெளியிடும் போது சிடி ஏன் நகர்கிறது ?

சுவாரஸ்யமான பலூன் திட்டங்கள் – நீங்கள் வீட்டிலேயே முயற்சி செய்யலாம்:

பலூன் ராக்கெட் செய்யவும்.

உங்கள் சொந்த ஹாட் ஏர் பலூனை உருவாக்கவும்

DIY பலூன் ஆற்றல்மிக்க கார்

இன்னும் சில யோசனைகள் .

மினி ஹோவர் கிராஃப்ட்ஸை உருவாக்கும் இந்த அறிவியல் திட்டத்தில் உங்கள் யோசனைகளை விரிவுபடுத்துங்கள் மற்றும் பின்வரும் பரிந்துரைகளின் உதவியுடன் உங்கள் திறன்களை மேம்படுத்தவும்.

1) மற்றொரு வட்டமான பொருளைப் பயன்படுத்தி, ஹோவர் கிராஃப்ட் நகரும் திறனை சரி பார்க்கவும்.

2) காற்று நீக்கப்பட்ட பலூனைப் பயன்படுத்தி அதே செயல்பாட்டை முயற்சிக்கவும். காற்று நீக்கப்பட்ட அல்லது காற்று நிரப்பிய பலூன்களில் எது சரியான முடிவுகளைக் காட்டுகின்றது என்பதைச் சரிபார்க்கவும்.

3) உங்கள் ஹோவர் கிராஃப்ட் வேகமாக நகர வெவ்வேறு மாதிரிகள் கொண்டு பரிசோதித்துப் பார்க்கவும்.

4) பாட்டில் மூடி மற்றும் சிடி அளவுகளை மாற்றி உங்கள் ஹோவர் கிராஃப்ட் செயலில் மாற்றம் ஏற்படுகிறதா என்றும் பார்க்கலாம்.

5) வெவ்வேறு அளவிலான பலூன்களைப் பயன்படுத்தவும், பெரிய அளவிலான பலூன் சிடியை நீண்ட தூரத்திற்கு நகர்த்துமா என்பதை பரிசோதித்துப் பாருங்கள்.

6) வெவ்வேறு மேற்பரப்புகள் ஹோவர் கிராஃப்ட்ஸ் இயக்கத்தில் வெவ்வேறு தாக்கங்களைத் தருகின்றன. எனவே, அவற்றை முயற்சி செய்து கண்டுபிடிக்கவும்.

7) பெரிய சிடி அல்லது பிளாஸ்டிக் தட்டுகள் போன்ற பெரிய வட்டங்களைப் பயன்படுத்தி ஹோவர் கிராஃப்ட் தயாரித்து பாருங்கள்.

8) ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன் ஹோவர் கிராஃப்ட்டை எவ்வாறு இயக்க்குகிறது என்பதைப் முயற்சி செய்துப் பாருங்கள்.

உங்கள் ஹோவர் கிராஃப்ட் வேலை செய்யாவிட்டால் என்ன செய்வது?

உங்கள் ஹோவர் கிராஃப்ட் கட்டுமானத்தைப் பற்றி சிந்திக்க அல்லது மீண்டும் சரிபார்க்க சில விஷயங்கள்:

1) பயன்படுத்தப்பட்ட சிடியில் விரிசல்கல் உள்ளதா என்பதை சரிபார்க்கவும். விரிசல்கல் இருந்தால், அதை புதியவற்றுடன் மாற்றி, செயல்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

2) உங்கள் சிடி சரியானதாக இருந்தால், பாட்டில் மூடியில் போடப்பட்ட துளைகளின் அளவு மற்றும் எண்ணிக்கையை மாற்றம் செய்து பாருங்கள். நீங்கள் சிறிது மற்றும் குறைவான துளைகளை வைத்திருந்தால், பலூனில் இருந்து காற்று வெளியேறும் போது ஏற்பட கூடிய குறைந்த அழுத்தம் காரணமாக ஹோவர் கிராஃப்ட் சரியாக வேலை செய்யாது.

3) பின்னர், பலூனில் வேறு எந்த திறப்பிலிருந்தும் காற்று கசியவில்லை என்பதை சரிபார்க்கவும்.

4) மேலும், ஹோவர் கிராஃப்ட் சறுக்க வேண்டிய இடம் சமமான பகுதியாகவும் இருத்தல் அவசியம். மணல், தூசி துகள்கள், கரடுமுரடான தரைவிரிப்பு, புல் போன்றவை உங்கள் ஹோவர் கிராஃப்ட்டை நகர விடாமல் தடுக்கும்.

நாங்கள் எந்த அபாயகரமான பொருட்களையும் பயன்படுத்தாததால், குழந்தைகள் தங்கள் ஹோவர் கிராஃப்ட்ஸை உருவாக்குவது எளிது சிறு பிள்ளைகள் இந்த பரிசோதனையை செய்யும் பொழுது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். மகிழ்ச்சியான வட்டமிடுதல்!

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன